Surah Yunus Verse 24 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Yunusإِنَّمَا مَثَلُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ مِمَّا يَأۡكُلُ ٱلنَّاسُ وَٱلۡأَنۡعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلۡأَرۡضُ زُخۡرُفَهَا وَٱزَّيَّنَتۡ وَظَنَّ أَهۡلُهَآ أَنَّهُمۡ قَٰدِرُونَ عَلَيۡهَآ أَتَىٰهَآ أَمۡرُنَا لَيۡلًا أَوۡ نَهَارٗا فَجَعَلۡنَٰهَا حَصِيدٗا كَأَن لَّمۡ تَغۡنَ بِٱلۡأَمۡسِۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَتَفَكَّرُونَ
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்