Surah Yunus Verse 68 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Yunusقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱلۡغَنِيُّۖ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ إِنۡ عِندَكُم مِّن سُلۡطَٰنِۭ بِهَٰذَآۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா