Surah Yunus Verse 71 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Yunus۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ
(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்