Surah Yusuf Verse 40 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Yusufمَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து)