Surah Yusuf Verse 50 - Tamil Translation by Jan Turst Foundation
Surah Yusufوَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرۡجِعۡ إِلَىٰ رَبِّكَ فَسۡـَٔلۡهُ مَا بَالُ ٱلنِّسۡوَةِ ٱلَّـٰتِي قَطَّعۡنَ أَيۡدِيَهُنَّۚ إِنَّ رَبِّي بِكَيۡدِهِنَّ عَلِيمٞ
(இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், "நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, 'தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?' என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றனான்" என்று கூறினார்