Surah Ar-Rad Verse 16 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Ar-Radقُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ قُلِ ٱللَّهُۚ قُلۡ أَفَٱتَّخَذۡتُم مِّن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ لَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ نَفۡعٗا وَلَا ضَرّٗاۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ أَمۡ هَلۡ تَسۡتَوِي ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمۡ جَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُواْ كَخَلۡقِهِۦ فَتَشَٰبَهَ ٱلۡخَلۡقُ عَلَيۡهِمۡۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ وَهُوَ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّـٰرُ
(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீரே (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவீராக. அவ்வாறிருக்க ‘‘அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அவை தங்களுக்கே ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன'' என்றும் கூறுவீராக. (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘குருடரும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?'' என்று கேட்பீராக. அல்லது ‘‘அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா?'' (என்றும் கேட்பீராக.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) கூறுவீராக: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகிறான்