Surah Al-Kahf Verse 21 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Kahfوَكَذَٰلِكَ أَعۡثَرۡنَا عَلَيۡهِمۡ لِيَعۡلَمُوٓاْ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيۡبَ فِيهَآ إِذۡ يَتَنَٰزَعُونَ بَيۡنَهُمۡ أَمۡرَهُمۡۖ فَقَالُواْ ٱبۡنُواْ عَلَيۡهِم بُنۡيَٰنٗاۖ رَّبُّهُمۡ أَعۡلَمُ بِهِمۡۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُواْ عَلَىٰٓ أَمۡرِهِمۡ لَنَتَّخِذَنَّ عَلَيۡهِم مَّسۡجِدٗا
(மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்