Surah Al-Baqara Verse 110 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
மேலும், நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், ‘‘ஜகாத்' கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பிவைப்பீர்களோ அதையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால், இறப்பதற்கு முன்னரே இயன்ற அளவு நன்மை செய்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்