Surah Al-Baqara Verse 150 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
(நபியே!) நீர் எங்கு சென்றாலும் (தொழும்போது) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்தபோதிலும் ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்