Surah Al-Baqara Verse 184 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraأَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்று வி)டவும். தவிர, (ஏதாவது ஒரு காரணத்தினால்) நோன்பு நோற்க சிரமப்படுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதை விட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்)