Surah Al-Baqara Verse 187 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraأُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ
(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், ஒரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள் மீது இரக்கமுற்று உங்கள் சிரமத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும்வரை (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவற்றைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்று) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) மஸ்ஜிதுகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நெருங்காதீர்கள். மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்