Surah Al-Baqara Verse 213 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraكَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பிவைத்தான். மேலும், அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தின் பக்கம் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக்கொண்டு நேர்வழி காட்டினான். இன்னும் (இவ்வான்ற) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்