Surah Al-Baqara Verse 228 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்