Surah Al-Baqara Verse 231 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்