Surah Al-Baqara Verse 247 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்