Surah Al-Baqara Verse 253 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqara۞تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்கள் அல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கிறான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கிறான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரயீல் என்னும்) ‘பரிசுத்த ஆத்மா'வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம் வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றையே செய்வான்