Surah Al-Baqara Verse 260 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraوَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
இப்றாஹீம் (இறைவனை நோக்கி), “என் இறைவனே! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய். (அதை) நீ எனக்குக் காண்பி'' எனக் கூறியபோது, அவன் (இதை) ‘‘நீர் நம்பவில்லையா?'' என்று கேட்டான். (அதற்கு) அவர் ‘‘நான் நம்பியே இருக்கின்றன். ஆயினும், (அதை என் கண்ணால் கண்டு) என் உள்ளம் திருப்தியடைவதற்காக (அதைக் காண்பி)'' எனக் கூறினார். (அதற்கவன்) ‘‘நான்கு பறவைகளைப் பிடித்து நீர் அவற்றைப் பழக்கி, பின்னர் (அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவற்றை நீர் கூப்பிடுவீராக. அவை உம்மிடம் பறந்து வந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மிக்க நுண்ணறிவுடையவன் என்பதையும் நீர் உறுதியாக அறிந்து கொள்வீராக'' என்றான்