Surah Al-Baqara Verse 85 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Baqaraثُمَّ أَنتُمۡ هَـٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகிறீர்கள். உங்களில் பலரை அவர்களின் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கிறீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிக்) கைதிகளாக உங்களிடம் (உதவிதேடி) வந்துவிட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கைகொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை