Surah Al-Qasas Verse 29 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Qasas۞فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ
மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்