Surah Al-Ahzab Verse 4 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Ahzabمَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٖ مِّن قَلۡبَيۡنِ فِي جَوۡفِهِۦۚ وَمَا جَعَلَ أَزۡوَٰجَكُمُ ٱلَّـٰٓـِٔي تُظَٰهِرُونَ مِنۡهُنَّ أُمَّهَٰتِكُمۡۚ وَمَا جَعَلَ أَدۡعِيَآءَكُمۡ أَبۡنَآءَكُمۡۚ ذَٰلِكُمۡ قَوۡلُكُم بِأَفۡوَٰهِكُمۡۖ وَٱللَّهُ يَقُولُ ٱلۡحَقَّ وَهُوَ يَهۡدِي ٱلسَّبِيلَ
எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்