Surah Al-Ahzab Verse 51 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Ahzab۞تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا
(நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்