Surah Fussilat Verse 39 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Fussilatوَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன்