Surah Fussilat Verse 45 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Fussilatوَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்