Surah Fussilat Verse 47 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Fussilat۞إِلَيۡهِ يُرَدُّ عِلۡمُ ٱلسَّاعَةِۚ وَمَا تَخۡرُجُ مِن ثَمَرَٰتٖ مِّنۡ أَكۡمَامِهَا وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَيَوۡمَ يُنَادِيهِمۡ أَيۡنَ شُرَكَآءِي قَالُوٓاْ ءَاذَنَّـٰكَ مَامِنَّا مِن شَهِيدٖ
(நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்