Surah Ash-Shura Verse 15 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Ash-Shuraفَلِذَٰلِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡۖ وَقُلۡ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٖۖ وَأُمِرۡتُ لِأَعۡدِلَ بَيۡنَكُمُۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمۡۖ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡۖ لَا حُجَّةَ بَيۡنَنَا وَبَيۡنَكُمُۖ ٱللَّهُ يَجۡمَعُ بَيۡنَنَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ
ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது