Surah Az-Zukhruf Verse 32 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Az-Zukhrufأَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ
(நபியே!) உமது இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தானா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரை விட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். (நபித்துவம் என்னும்) உமது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதை அவன் விரும்பியவருக்குத்தான் கொடுப்பான்)