Surah Al-Ahqaf Verse 17 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Ahqafوَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்