Surah Al-Ahqaf Verse 8 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Ahqafأَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
(நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்