Surah Al-Maeda Verse 101 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Maedaيَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ
நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்