Surah Al-Maeda Verse 106 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Maedaيَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்