Surah Al-Maeda Verse 4 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Maedaيَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்