Surah Al-Maeda Verse 41 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Maeda۞يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّـٰعُونَ لِلۡكَذِبِ سَمَّـٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ
(நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு