Surah Al-Hadid Verse 10 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Hadidوَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَـٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர்கள் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தார்களோ, அவர்களும் அதற்குப் பின்னர், தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் (-மக்கா வெற்றிக்கு முன் செலவு செய்து போரிட்டவர்கள்) அதற்கு பின்னர் செலவு செய்து போரிட்டவர்களைவிட மகத்தான பதவி உடையவர்கள். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையை (சொர்க்கத்தை)த்தான் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்