Surah Al-Hadid Verse 27 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Hadidثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ
ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய பல) தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பிவைத்தோம். அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கருணையையும் இரக்கத்தையும் உண்டு பண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதை உண்டுபண்ணிக்கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உம்மை) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (நபியே! உம்மை நிராகரிக்கின்ற) பாவிகளாகவே இருக்கின்றனர்