Surah Al-Anaam Verse 128 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anaamوَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ
(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்