Surah Al-Anaam Verse 146 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anaamوَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ
(நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே)