Surah Al-Anaam Verse 25 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anaamوَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
(நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்