Surah Al-Anaam Verse 70 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anaamوَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَعِبٗا وَلَهۡوٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ وَإِن تَعۡدِلۡ كُلَّ عَدۡلٖ لَّا يُؤۡخَذۡ مِنۡهَآۗ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ أُبۡسِلُواْ بِمَا كَسَبُواْۖ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ
(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்