Surah Al-Anaam Verse 73 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anaamوَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ وَيَوۡمَ يَقُولُ كُن فَيَكُونُۚ قَوۡلُهُ ٱلۡحَقُّۚ وَلَهُ ٱلۡمُلۡكُ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ
வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்