Surah Al-Araf Verse 160 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafوَقَطَّعۡنَٰهُمُ ٱثۡنَتَيۡ عَشۡرَةَ أَسۡبَاطًا أُمَمٗاۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسۡتَسۡقَىٰهُ قَوۡمُهُۥٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنۢبَجَسَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۚ وَظَلَّلۡنَا عَلَيۡهِمُ ٱلۡغَمَٰمَ وَأَنزَلۡنَا عَلَيۡهِمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்