Surah Al-Araf Verse 195 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafأَلَهُمۡ أَرۡجُلٞ يَمۡشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَيۡدٖ يَبۡطِشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَعۡيُنٞ يُبۡصِرُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۗ قُلِ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக