Surah Al-Araf Verse 53 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafهَلۡ يَنظُرُونَ إِلَّا تَأۡوِيلَهُۥۚ يَوۡمَ يَأۡتِي تَأۡوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشۡفَعُواْ لَنَآ أَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ قَدۡ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்