Surah Al-Araf Verse 73 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafوَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ
‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்