Surah Al-Anfal Verse 47 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Anfalوَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِم بَطَرٗا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۚ وَٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்