Surah Al-Araf Verse 168 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafوَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّـٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்