Surah Al-Araf Verse 169 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafفَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ
அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா