Surah Al-Araf Verse 38 - Tamil Translation by Abdulhameed Baqavi
Surah Al-Arafقَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَـٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ
(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்