Surah Fatir - Tamil Translation by Abdulhameed Baqavi
ٱلۡحَمۡدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ جَاعِلِ ٱلۡمَلَـٰٓئِكَةِ رُسُلًا أُوْلِيٓ أَجۡنِحَةٖ مَّثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۚ يَزِيدُ فِي ٱلۡخَلۡقِ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்
Surah Fatir, Verse 1
مَّا يَفۡتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحۡمَةٖ فَلَا مُمۡسِكَ لَهَاۖ وَمَا يُمۡسِكۡ فَلَا مُرۡسِلَ لَهُۥ مِنۢ بَعۡدِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்
Surah Fatir, Verse 2
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ هَلۡ مِنۡ خَٰلِقٍ غَيۡرُ ٱللَّهِ يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்
Surah Fatir, Verse 3
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்படாதீர்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்
Surah Fatir, Verse 4
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்
Surah Fatir, Verse 5
إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمۡ عَدُوّٞ فَٱتَّخِذُوهُ عَدُوًّاۚ إِنَّمَا يَدۡعُواْ حِزۡبَهُۥ لِيَكُونُواْ مِنۡ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே
Surah Fatir, Verse 6
ٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٌ
எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு
Surah Fatir, Verse 7
أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنٗاۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۖ فَلَا تَذۡهَبۡ نَفۡسُكَ عَلَيۡهِمۡ حَسَرَٰتٍۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَصۡنَعُونَ
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்
Surah Fatir, Verse 8
وَٱللَّهُ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَسُقۡنَٰهُ إِلَىٰ بَلَدٖ مَّيِّتٖ فَأَحۡيَيۡنَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே
Surah Fatir, Verse 9
مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّـٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَـٰٓئِكَ هُوَ يَبُورُ
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்
Surah Fatir, Verse 10
وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே
Surah Fatir, Verse 11
وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக
Surah Fatir, Verse 12
يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا يَمۡلِكُونَ مِن قِطۡمِيرٍ
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை
Surah Fatir, Verse 13
إِن تَدۡعُوهُمۡ لَا يَسۡمَعُواْ دُعَآءَكُمۡ وَلَوۡ سَمِعُواْ مَا ٱسۡتَجَابُواْ لَكُمۡۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا يُنَبِّئُكَ مِثۡلُ خَبِيرٖ
அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்
Surah Fatir, Verse 14
۞يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ
மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்
Surah Fatir, Verse 15
إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ
அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்
Surah Fatir, Verse 16
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ
இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல
Surah Fatir, Verse 17
وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ وَإِن تَدۡعُ مُثۡقَلَةٌ إِلَىٰ حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَيۡءٞ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰٓۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفۡسِهِۦۚ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ
(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது
Surah Fatir, Verse 18
وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்
Surah Fatir, Verse 19
وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ
(அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது)
Surah Fatir, Verse 20
وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلۡحَرُورُ
நிழலும், வெயிலும் (சமமாகாது)
Surah Fatir, Verse 21
وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ
உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது
Surah Fatir, Verse 22
إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர, (நீர் கூறுகிறவாறே அவர்கள் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடியவர்) அல்ல
Surah Fatir, Verse 23
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை
Surah Fatir, Verse 24
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ
(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்
Surah Fatir, Verse 25
ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ
ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்)
Surah Fatir, Verse 26
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன
Surah Fatir, Verse 27
وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَـٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ
மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்
Surah Fatir, Verse 28
إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ
எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்
Surah Fatir, Verse 29
لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ
(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்
Surah Fatir, Verse 30
وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ هُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرُۢ بَصِيرٞ
(நபியே!) நாம் உமக்கு வஹ்யி மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவன், உற்று நோக்குபவன் ஆவான்
Surah Fatir, Verse 31
ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ فَمِنۡهُمۡ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ وَمِنۡهُم مُّقۡتَصِدٞ وَمِنۡهُمۡ سَابِقُۢ بِٱلۡخَيۡرَٰتِ بِإِذۡنِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ
பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்
Surah Fatir, Verse 32
جَنَّـٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ
(அவர்கள்) நிலையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்
Surah Fatir, Verse 33
وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَذۡهَبَ عَنَّا ٱلۡحَزَنَۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٞ شَكُورٌ
மேலும், (அவர்கள்) ‘‘தங்களை விட்டு எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்'' என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்
Surah Fatir, Verse 34
ٱلَّذِيٓ أَحَلَّنَا دَارَ ٱلۡمُقَامَةِ مِن فَضۡلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٞ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٞ
‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்)
Surah Fatir, Verse 35
وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ نَارُ جَهَنَّمَ لَا يُقۡضَىٰ عَلَيۡهِمۡ فَيَمُوتُواْ وَلَا يُخَفَّفُ عَنۡهُم مِّنۡ عَذَابِهَاۚ كَذَٰلِكَ نَجۡزِي كُلَّ كَفُورٖ
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்
Surah Fatir, Verse 36
وَهُمۡ يَصۡطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ أَوَلَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ فَذُوقُواْ فَمَا لِلظَّـٰلِمِينَ مِن نَّصِيرٍ
அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்)
Surah Fatir, Verse 37
إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيۡبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிந்தவன்
Surah Fatir, Verse 38
هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَـٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا
அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை
Surah Fatir, Verse 39
قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّـٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا
(நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை
Surah Fatir, Verse 40
۞إِنَّ ٱللَّهَ يُمۡسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنۡ أَمۡسَكَهُمَا مِنۡ أَحَدٖ مِّنۢ بَعۡدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا
வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்
Surah Fatir, Verse 41
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا
‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை
Surah Fatir, Verse 42
ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا
(மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்
Surah Fatir, Verse 43
أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَكَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعۡجِزَهُۥ مِن شَيۡءٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ عَلِيمٗا قَدِيرٗا
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்
Surah Fatir, Verse 44
وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்
Surah Fatir, Verse 45