Surah Al-Qalam - Tamil Translation by Abdulhameed Baqavi
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக
Surah Al-Qalam, Verse 1
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ
(நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல
Surah Al-Qalam, Verse 2
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ
நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது
Surah Al-Qalam, Verse 3
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்
Surah Al-Qalam, Verse 4
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ
‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்
Surah Al-Qalam, Verse 5
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ
‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்
Surah Al-Qalam, Verse 6
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்
Surah Al-Qalam, Verse 7
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்
Surah Al-Qalam, Verse 8
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ
(கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்
Surah Al-Qalam, Verse 9
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்
Surah Al-Qalam, Verse 10
هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ
(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்
Surah Al-Qalam, Verse 11
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ
(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி
Surah Al-Qalam, Verse 12
عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ
கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட
Surah Al-Qalam, Verse 13
أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ
ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு)
Surah Al-Qalam, Verse 14
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்
Surah Al-Qalam, Verse 15
سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ
(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்
Surah Al-Qalam, Verse 16
إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்
Surah Al-Qalam, Verse 17
وَلَا يَسۡتَثۡنُونَ
எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை
Surah Al-Qalam, Verse 18
فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ
ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது
Surah Al-Qalam, Verse 19
فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ
பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று
Surah Al-Qalam, Verse 20
فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ
(அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து
Surah Al-Qalam, Verse 21
أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ
‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்)
Surah Al-Qalam, Verse 22
فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ
(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்
Surah Al-Qalam, Verse 23
أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ
(யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்)
Surah Al-Qalam, Verse 24
وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ
தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்
Surah Al-Qalam, Verse 25
فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ
(சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்
Surah Al-Qalam, Verse 26
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
(பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்)
Surah Al-Qalam, Verse 27
قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ
அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்
Surah Al-Qalam, Verse 28
قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி
Surah Al-Qalam, Verse 29
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ
பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்
Surah Al-Qalam, Verse 30
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்
Surah Al-Qalam, Verse 31
عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்)
Surah Al-Qalam, Verse 32
كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
(நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா
Surah Al-Qalam, Verse 33
إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு
Surah Al-Qalam, Verse 34
أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா
Surah Al-Qalam, Verse 35
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்
Surah Al-Qalam, Verse 36
أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ
அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா
Surah Al-Qalam, Verse 37
إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா
Surah Al-Qalam, Verse 38
أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா
Surah Al-Qalam, Verse 39
سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
(நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி
Surah Al-Qalam, Verse 40
أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்
Surah Al-Qalam, Verse 41
يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்
Surah Al-Qalam, Verse 42
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்)
Surah Al-Qalam, Verse 43
فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ
ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்
Surah Al-Qalam, Verse 44
وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ
(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது)
Surah Al-Qalam, Verse 45
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ
(நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா
Surah Al-Qalam, Verse 46
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா
Surah Al-Qalam, Verse 47
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ
(நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக
Surah Al-Qalam, Verse 48
لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ
அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்
Surah Al-Qalam, Verse 49
فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ
(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்
Surah Al-Qalam, Verse 50
وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்
Surah Al-Qalam, Verse 51
وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
(நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை
Surah Al-Qalam, Verse 52