Surah As-Sajda - Tamil Translation by Abdulhameed Baqavi
الٓمٓ
அலிஃப் லாம் மீம்
Surah As-Sajda, Verse 1
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
(நபியே! உம் மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் ஒரு சந்தேகமுமில்லை
Surah As-Sajda, Verse 2
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ
(நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக
Surah As-Sajda, Verse 3
ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா
Surah As-Sajda, Verse 4
يُدَبِّرُ ٱلۡأَمۡرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلۡأَرۡضِ ثُمَّ يَعۡرُجُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥٓ أَلۡفَ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்
Surah As-Sajda, Verse 5
ذَٰلِكَ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன்; (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்
Surah As-Sajda, Verse 6
ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ
அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்
Surah As-Sajda, Verse 7
ثُمَّ جَعَلَ نَسۡلَهُۥ مِن سُلَٰلَةٖ مِّن مَّآءٖ مَّهِينٖ
பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியைப் படைக்கிறான்
Surah As-Sajda, Verse 8
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே
Surah As-Sajda, Verse 9
وَقَالُوٓاْ أَءِذَا ضَلَلۡنَا فِي ٱلۡأَرۡضِ أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدِۭۚ بَلۡ هُم بِلِقَآءِ رَبِّهِمۡ كَٰفِرُونَ
‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்
Surah As-Sajda, Verse 10
۞قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ
(நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்
Surah As-Sajda, Verse 11
وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ
(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்)
Surah As-Sajda, Verse 12
وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின் இன்னும் மனிதர்களில் (உள்ள பாவிகள்) பலரைக் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம் தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டு விட்டது
Surah As-Sajda, Verse 13
فَذُوقُواْ بِمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمۡۖ وَذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்)
Surah As-Sajda, Verse 14
إِنَّمَا يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْۤ سُجَّدٗاۤ وَسَبَّحُواْ بِحَمۡدِ رَبِّهِمۡ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ۩
நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்
Surah As-Sajda, Verse 15
تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்
Surah As-Sajda, Verse 16
فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன)
Surah As-Sajda, Verse 17
أَفَمَن كَانَ مُؤۡمِنٗا كَمَن كَانَ فَاسِقٗاۚ لَّا يَسۡتَوُۥنَ
நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள்
Surah As-Sajda, Verse 18
أَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ فَلَهُمۡ جَنَّـٰتُ ٱلۡمَأۡوَىٰ نُزُلَۢا بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)செயல்களின் காரணமாக சொர்க்கம் தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள்
Surah As-Sajda, Verse 19
وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُواْ فَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَآ أُعِيدُواْ فِيهَا وَقِيلَ لَهُمۡ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்படும்
Surah As-Sajda, Verse 20
وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்
Surah As-Sajda, Verse 21
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ
(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்
Surah As-Sajda, Verse 22
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَلَا تَكُن فِي مِرۡيَةٖ مِّن لِّقَآئِهِۦۖ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம்.ஆகவே, (நபியே! மிஃராஜ் இரவில்) அவரை சந்தித்ததில் நீர் சந்தேகிக்காதீர்.நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக ஆக்கினோம்
Surah As-Sajda, Verse 23
وَجَعَلۡنَا مِنۡهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا لَمَّا صَبَرُواْۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ
நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்
Surah As-Sajda, Verse 24
إِنَّ رَبَّكَ هُوَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
(நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) அவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி மறுமை நாளில் உமது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்
Surah As-Sajda, Verse 25
أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா
Surah As-Sajda, Verse 26
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَسُوقُ ٱلۡمَآءَ إِلَى ٱلۡأَرۡضِ ٱلۡجُرُزِ فَنُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا تَأۡكُلُ مِنۡهُ أَنۡعَٰمُهُمۡ وَأَنفُسُهُمۡۚ أَفَلَا يُبۡصِرُونَ
நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா
Surah As-Sajda, Verse 27
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡفَتۡحُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
“(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்'' எனக் கேட்கின்றனர்
Surah As-Sajda, Verse 28
قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ
(அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்பட மாட்டார்கள்.”
Surah As-Sajda, Verse 29
فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَٱنتَظِرۡ إِنَّهُم مُّنتَظِرُونَ
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்
Surah As-Sajda, Verse 30